No movies this weekend,I didnt want to watch Whats your Rashee ? .I am eagerly awaiting for Wake up sid .The songs of wake up sid -Fresh and good.
நான் கடவுள் (2009)
பலர் வியந்திருக்கலாம் ,ஏன் இன்னும் நான் கடவுள் விமர்சனம் இந்த பகுதியில் வரவில்லை என்று.நான் படம் திரை இட்ட அடுத்த சில கட்சிகளிலே பார்த்து விட்டாலும் ஏனோ என் மனம் ஒரு வித திருப்தி அடையாது போல் இருந்தது.பல முறை யோசித்து பார்த்தும் ,அடையாத ஒரு அதிருப்தியை அடுத்த சில நாளில் மீண்டும் ஒரு முறை தனியாக சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன்.இரண்டாவது முறை படத்தை ஒரு ரசிகன் என்ற முறையில் அல்லாமல் ஒரு விமர்சகனாக இருந்து பார்க்க நினைத்தேன்.அதில் வெற்றி அடைந்தேனா என்று தெரியவில்லை,ஆனால் பாலாவின் நான் கடவுள் ஒரு மைல் கல் . பாலா என்ற படைப்பாளியாக இருப்பது ஒரு சுலபமான விஷயம் அல்ல.பாலாவின் படைப்பாக இருப்பதும் ஒரு சுலபம் அல்ல.அதற்கு உரிய வீரியமும் ,விஷயமும் அடக்கி அதை ஐந்து வருடம் கழித்து வெளியே வருவது அசாத்திய நம்பிக்கை உரிய காரியம்.பாலா என்ற மனிதனுக்குள் இருக்கும் கதைகளை நாம் என்றுமே பார்த்தது இல்லை.பாலா என்ற படைப்பாளி நமக்கு காட்டும் உலகம் நாம் பார்த்திராத உலகம்.சினிமாவை அறியாத உலகம்.இந்த முறை உலகம் கொஞ்சம் மாறுப்பட்டு இருக்கிறது,இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உலகையும் அதன் வாழ்கையையும் ...
Comments